| 245 |
: |
_ _ |a குன்னத்தூர் - வரிச்சியூர் குடைவரை - |
| 300 |
: |
_ _ |a குடைவரை |
| 500 |
: |
_ _ |a குன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு அஸ்தகிரீசுவரர் கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன் அஸ்தகிரீசுவரர் என அழைக்கப்படுகின்றார். அஸ்தகிரீசுவரர் கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை. இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை நோக்கிய வகையில் வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும். இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது. இக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது. |
| 510 |
: |
_ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ |
| 520 |
: |
_ _ |a மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று உதயகிரீசுவரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில், அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது. இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது. இங்கு உதயகிரீசுவரர் என்ற பெயரில் கிழக்கு நோக்கியதாக குடைவரை ஒன்று முற்காலப் பாண்டியர்களால் குடைவிக்கப்பட்டது. எளிமையான குடைவரைக் கோயிலாக இது விளங்குகிறது. |
| 653 |
: |
_ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், குன்னத்தூர், வரிச்சியூர், சிவகங்கை, சிவகெங்கை,சிவகங்கை மாவட்ட மரபுச் சின்னங்கள், சிவகங்கை மாவட்ட குடைவரைகள், வரிச்சியூர் குடைவரை, வரிச்சியூர் உதயகிரீசுவரர் குடைவரை, உதயகிரீசுவரர் சிவன் குடைவரை, குன்னத்தூர் குடைவரைகள் மரபுச் சின்னம், தொல்லியல் சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல் |
| 700 |
: |
_ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a உதயகிரீசுவரர் கோயில் |c குன்னத்தூர் |d சிவகங்கை |f திருப்பத்தூர் |
| 906 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 9.9117453073047 |
| 915 |
: |
_ _ |a 78.256202423299 |
| 934 |
: |
_ _ |a வரிச்சியூர் பிராமிக் கல்வெட்டு, வரிச்சியூர் அஸ்தகிரீசுவரர் கோயில், குன்னத்தூர் மலைக்கோயில் |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00098 |
| barcode |
: |
TVA_MON_00098 |
| book category |
: |
குடைவரைக் கோயில்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_MON_00098/TVA_MON_00098_சிவகங்கை_குன்னத்தூர்_குடைவரைக்-கோயில்-0001.jpg
TVA_MON_00098/TVA_MON_00098_சிவகங்கை_குன்னத்தூர்_குடைவரைக்-கோயில்-0002.jpg
TVA_MON_00098/TVA_MON_00098_சிவகங்கை_குன்னத்தூர்_குடைவரைக்-கோயில்-0003.jpg
TVA_MON_00098/TVA_MON_00098_சிவகங்கை_குன்னத்தூர்_குடைவரைக்-கோயில்-0004.jpg
|